செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்: இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப் பதிவு தொடக்கம்
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப். 5) நடக்கிறது.
திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 46 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ள நிலையில், 2.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இங்கு எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகின்றனர்.
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 பேர் வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ள 9 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 5:08 pm
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
November 4, 2025, 5:04 pm
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவர் கைது
November 2, 2025, 5:26 pm
இன்று கல்லறை திருநாள், நாளை முகூர்த்தநாள்: கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு
November 2, 2025, 11:19 am
அதிமுக தலைமைக்கு எதிராக யார் துரோகம் செய்தாலும் நடவடிக்கை: செங்கோட்டையன் நீக்கம் குறித்து இபிஎஸ் விளக்கம்
October 31, 2025, 11:51 am
‘செந்தமிழர் சீமான்’ என்று வாழ்த்தி முழக்கமிட்ட வைகோ: தொண்டர்கள் மகிழ்ச்சி
October 29, 2025, 5:59 pm
