நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

விமர்சகன் 5-ஆம் ஆண்டு விருது விழா:நம்பிக்கை குழுமத்தின் தலைமை மேலாளர் தயாளன் சண்முகத்திற்கு அக்னி சுகுமார் விருது வழங்கி கௌரவம்

கோலாலம்பூர்:

மலேசியக் கலைத் துறை முதன்மை ஊடகமாக விளங்கும் விமர்சகனின் 5-ஆம் ஆண்டு விருதளிப்பு விழா நேற்று விஸ்மா துன் சம்பந்தன் தான்ஶ்ரீ சோமா அரங்கில் மிக விமரசையாக நடந்தது.

இவ்விழாவில் நம்பிக்கை குழுமத்தின் தலைமை மேலாளர் தயாளன் சண்முகத்திற்கு, ஊடகத் துறையின் முன்னோடியாகப் போற்றக் கூடியவர்களில் ஒருவரான அக்னி சுகுமார் ஊடக சிறப்பு விருந்து வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இம்முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விருதினை முதல் நபராகப் பெற்றுக் கொள்வதில் தாம் பெருமை கொள்வதாக தயாளன் சண்முகம் குறிப்பிட்டார். 

அதோடு அக்னி சுகுமார் மலேசிய எழுத்துத் துறையில் தனக்கெனத் தனி அடையாளத்தை ஏற்படுத்தியவர். 

உலக நடப்புகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் போல் யாராலும் எழுத முடியாது என்று தயாளன் புகழாரம் சூட்டினார்.

தமது வாழ்க்கையில் மிக முக்கிய விருதாக அக்னி சுகுமார் பெயரில் வழங்கப்பட்ட விருதினை கருதுவதாகவும் அதனை நம்பிக்கை குழுமத்திற்கு சமர்ப்பணம் செய்வதாகவும் தயாளன் சண்முகம் குறிப்பிட்டார்.

இந்த விருது விழாவில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த விமர்சகன் ஊடகத்தின் தலைவர் எஸ்பி சரவணனுக்கும் அவர் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

அதோடு அக்னி குமார் ஊடக விருது மின்னல் பண்பலையில் அறிவிப்பாளர் மோகனுக்கும் வழஙக்கப்பட்டது. அவர் மின்னலின் தலைவர் ரோகினிக்குத் தமது நன்றியினை உரித்தாக்கினார். இந்த விருது விழாவில் 40 பெருந்தகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

குறிப்பாக வானொலி நாடகத் துறையைச் சார்ந்த முன்னணி மூத்த கலைஞர்களுக்குச் சிறப்புச் செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. அதே போல் 8 பேருக்கு ரத்னா என்ற அடைமொழியுடன் கூடிய விருதுகளை ரத்னவள்ளி அம்மையார் வழங்கினார்.

அதோடு குறும்படங்களுக்குப் பல்வேறு பிரிவுகளில் விருந்துகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- தயாளன் சண்முகம் & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset