நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் இந்தியப் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவர்; புதிய பயண விதிகள்: இங்கிலாந்து அறிவிப்பால் இந்தியா அதிருப்தி

இந்தியாவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும்கூட, இங்கிலாந்துக்குச் செல்லும்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே: இங்கிலாந்து புதிய பயண விதியின்படி அறிவித்துள்ளது


புதுடெல்லி:

இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு பயணம் செல்பவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் போடப்படும் தடுப்பூசிகளை இங்கிலாந்து இன்னும் அங்கீகரிக்கவில்லை. அதன் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் அஸ்ட்ரா ஸெனக்கா, ஃபைசர், மோடர்னா ஆகிய சில வகைகள் இடம்பெற்றுள்ளன.

UK eases travel curbs for Indian passengers from today, no mandatory  quarantine for fully vaccinated - India News

அதே போல் ஐரோப்பா, அமெரிக்காவின் தடுப்பூசி திட்டத்தையும் இங்கிலாந்து அங்கீகரித்துள்ளது.

புதிய அறிவிப்பின்படி, இந்தியாவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் கூட, இங்கிலாந்துக்குச் செல்லும்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் என்றே கருதப்படுவார்கள்.

இதானல் அந்நாட்டின் புதிய அறிவிப்பில் உள்ள தனிமைப்படுத்தல், மீண்டும் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற  வேண்டியிருக்கும்.

இங்கிலாந்து அரசின் இந்த நடவடிக்கை இனவெறிக்கு சமமானது என காங்கிரஸ் எம்பிக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இங்கிலாந்தின் புதிய விதிமுறைகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இன்று இங்கிலாந்து வெளியுறவு அமைச்சரை நேரில் சந்தித்த போது அந்நாட்டின் அறிவிப்பு குறித்து அவர் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset