செய்திகள் கலைகள்
இந்தியன் 2 - ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் பயணம் : 1996-ஆம் ஆண்டு அனைவரையும் வசீகரித்த இந்தியனின் மற்றொரு பயணம் ஜூலையில் திரையரங்குகளை அலங்கரிக்கவுள்ளது
கோலாலம்பூர்:
"இந்தியன் 2" திரைப்படத்தின் நட்சத்திர நடிகர்கள் உட்படப் படக்குழுவினர் தங்களது திரைப்பட விளம்பரத்திற்காக மலேசியாவிற்குப் பயணம் மேற்கொண்டு தலைநகர் வந்தடைந்தனர்.
புக்கிட் ஜலில் பெவிலியன் TGV அரங்கில் ஊடகவியளார்களைச் சந்தித்த அவர்கள், NU சென்ட்ரலில் நடந்த இரசிகர்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டனர்.
1996-ஆம் ஆண்டு வெளியீடு கண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த திரைப்படம் இந்தியன்.
இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் அதன் இரண்டாம் பாகம் "இந்தியன் 2" என்ற தலைப்பில் சுதந்திரத்தின் சக்திவாய்ந்த கதையுடன் கூடிய விரைவில் திரையரங்குகளை அலங்கரிக்கவுள்ளது.
இத்திரைப்படம் #comebackIndian #Zerotolerance #Senapathi என்ற ஹேஷ்டேக்குகளுடன் சமூக ஊடகங்களில் பெரியத் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.
மலேசியாவில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் இந்தியச் சினிமாவின் உச்ச நட்சத்திரமான உலகநாயகன் பத்மஸ்ரீ டாக்டர். கமல்ஹாசன், நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா, நடிகர் சித்தார்த் உட்பட இதர மதிப்பிற்குரிய பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.
பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடன இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி என்ற பன்முகம் கொண்டவர் ஆவார்.
Lyca Productions மற்றும் Red Giant Movies இணைந்து தயாரித்துள்ள "இந்தியன் 2" திரைப்படத்தைச் சிங்கப்பூரில் வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் திரைப்பட வினியோகஸ்தருமான 3Dot Movies மலேசியாவில் வெளியீடு செய்கின்றது.
அதோடு, இந்நிறுவனம் மலேசியாவில் 156 திரையரங்குகளுக்கு மேல் இத்திரைப்படத்தை வெளியீடு செய்கின்றது.
மலேசியாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தியன் 2 திரைப்படம் சினிமா இரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்துமென Lyca Productions மற்றும் Red Giant Movies ஆகிய இரு நிறுவனங்களும் தெரிவித்தன.
ஆழமான கதை களத்தின் மூலமாகப் பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி ஒருவகைத் தூண்டலை உண்டாக்குமென உலகநாயகன் கமல்ஹாசன் உணர்ச்சியாகப் பேசினார்.
செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து, NU சென்ட்ரலில் விறுவிறுப்பான இரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட ஆர்வலர்கள், டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள், சமூக, ஊடக வல்லுநர்கள், தொழில்துறைத் தலைவர்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச கலைஞர்கள் உட்பட 5000-க்கும் மேற்பட்ட இரசிகர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்கள் சந்திப்பு , இரசிகர்கள் சந்திப்பு மலேசியாவில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.
இதன் காரணமாக இந்தியன் 2 திரைப்படத்திற்காக எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
- தயாளன் சண்முகம் & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 21, 2024, 10:41 pm
காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றார்: முதல்வர் ரேவந்த் ரெட்டி
December 19, 2024, 10:07 pm
அழகு ராணி போட்டிகளில் நடக்கும் மோசடித்தனங்கள்: அம்பலப்படுத்தினார் நந்தினி
December 19, 2024, 3:34 pm
ஆஸ்கர் போட்டியிலிருந்து லாபதா லேடீஸ் நீக்கம்
December 18, 2024, 2:57 pm
2025ஆம் ஆண்டு வெளியாகவிருக்கும் முன்னணி தமிழ்த்திரைப்படங்கள்: ரசிகர்கள் உற்சாகம்
December 18, 2024, 12:31 pm
சோழன் திரைப்பட விழா 2024 எதிர்வரும் டிசம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது
December 16, 2024, 10:38 am
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்
December 15, 2024, 9:32 pm
புஷ்பா 2 திரைப்படத்தின் 10-ஆவது நாள் வசூல் ரூ. 1292 கோடியை எட்டியது
December 13, 2024, 4:26 pm
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கைது: காவல்துறையினர் அதிரடி
December 11, 2024, 10:31 am