நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நான் இறக்கவில்லை: விஷமச் செய்தியை யாரும் நம்ப வேண்டாம்: பி எச் அப்துல் ஹமீத் 

கொழும்பு:

நான் இறக்கவில்லை. எந்த ஒரு செய்தியையும் தீர விசாரித்து நிச்சயப்படுத்திய பிறகே பதிவிடும் ஊடகப் பண்புதான் இறந்துவிட்டது என்று பி எச் அப்துல் ஹமீத் வருத்தத்துடன் கூறினார்.

மாண்டவன் மீண்டு வந்து பேசுகிறானே என்று வியந்து நோக்கக்கூடும். 
நேற்றுஇலங்கை நேரப்படி, நள்ளிரவு முதல் இந்த நிமிடம்  வரை நான் நித்திரை கொள்ளவில்லை. அந்த விஷமச் செய்தியை கேட்டு ஆயிரம் பல்லாயிரம் அன்புள்ளங்கள் தொலைபேசியில் என்னை அழைத்து என் குரலை கேட்ட பின்தான் நான் உயிரோடு இருப்பதை நிச்சயப்படுத்திக்கொண்ட  பின்தான் அமைதியானார்கள். அதிலும் சிலர் என் குரலை கேட்ட பின்பு  கதறி அழுததைக் கேட்டு என்னால் தாங்க முடியவில்லை. 

எத்தனை ஆயிரம் அன்புள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்து ஈன்றாளோ என் அன்னை என்று நான் நினைத்துக் கொண்டேன்.  நேற்று இலங்கை பத்திரைகையில் நான் ஒரு கட்டுரை எழுதி இருந்தே. கட்டுரையின் ஆரம்பம் இவ்வாறுதான் இருந்தது.

மரணம் மனிதனுக்குத் தரும் வரம். அவனுடைய எதிர்மறையான சிந்தனைகளையெல்லாம் மறக்க செய்து அவனது நல்ல பக்கத்தை மட்டும் அந்த நல்ல நினைவுகளை மட்டும் பேசி மகிழ்வது. அப்படி ஒரு அனுபவம் தான் எனக்குக் கிடைத்தது.  

பல ஆயிரம் அன்புள்ளங்கள் என்னை நேசித்தாலும் என் துறைசார் பொறாமை காரணமாக அல்லது மத மாச்சர்யங்கள் கொண்ட சிலர், அதிலும் விறல் விட்டு எண்ணக்கூடிய சிலர் இதுவரை காலமும் எதிர்மறை விமர்சனங்களை பரப்பி இருக்கலாம். ஆனால் இந்தச் செய்தியை கேள்விப்பட்ட நேரம் முதல் என்னை பற்றிய நல்ல நினைவுகளை மட்டுமே மீட்டி இருப்பார்கள். இது நான் வாழும் காலம் வரை தொடர வேண்டும் என்று அந்த எல்லாருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன். 

இது எனக்கு மூன்றாவது அனுபவம். செத்துப் பிழைப்பது மூன்றாவது முறை. 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின்போது என்னையும் என் மனைவியையும் உயிரோடு எரித்து கொளுத்திவிட்டார்கள் என்ற வதந்தி இங்கு மட்டுமல்ல தமிழகத்திலும் பரவி தமிழகப் பத்திரிகைகளிலும் கேரளத்து மலையாளத்து பத்திரிகைகளிலும்  செய்தி வெளியானது. 

இரண்டாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் யூடியூப் தளம் நடத்தும் ஒருவர் அதிக பணம் ஈட்ட வேண்டும் என்ற பேராசையில் என்னுடைய படத்தை போட்டு, பிரபல டிவி தொகுப்பாளர் மரணம் கதறி அழுதது குடும்பம் என்று பதிவு செய்திருந்தார். அது இரண்டாவது முறை.

இது மூன்றாவது முறை. மூன்று முறை நான் உயிர்த்தெழுந்து இருக்கின்றேனா? என்று நகைச்சுவையாக எண்ணத் தோன்றுகிறது. 

நம் இறந்த பிறகு நம் மீது உண்மையான அன்பும் பாசமும் வைத்திருந்தவர்கள் யார் என்று பார்ப்பதற்கு நாம் இருக்க மாட்டோம். ஆனால் வாழும் காலத்திலேயே ஒரு முறை அதைக் கணிக்க, அதை அறிந்துகொள்ள, இறைவன் கொடுத்த சந்தர்ப்பம்தான் இது. 

இந்த செய்தியை முதன்முதலில் பரப்பியவருக்கு எத்தனையோ பேர் சாபமிட்டிருக்கலாம். அந்த சாபங்களில் இருந்து அந்த மனிதரைக்  காப்பாற்றும்படி அதே இறைவனிடம் நான் வேண்டுகின்றேன். ஏதோ ஒரு நன்மையைச் செய்திருக்கிறார் அவர்.

ஆகவே அன்புள்ளங்களே எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

- பிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset