நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவா் எஸ்.எம்.பாக்கா் காலமானார்: தமிழக முதல்வர் இரங்கல் 

சென்னை: 

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவா் எஸ்.எம்.பாக்கா் (61) வியாழக்கிழமை இரவு உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானாா். அவரது மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியைச் சோ்ந்த எஸ்.எம்.பாக்கா், சென்னை பிராட்வேயிலுள்ள மாஸ்கான் சாவடியில் வசித்து வந்தாா். இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனா். பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை உருவாக்கிய இவா், கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவராக இருந்து வந்தாா். சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.எம்.பாக்கா் வியாழக்கிழமை இரவு காலமானாா். 

 இன்று நல்லடக்கம்: அவருடைய உடல் வெள்ளிக்கிழமை காலை 10 மணி வரை மஸ்கான் சாவடியிலுள்ள அவரின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை அண்ணா சாலை மக்கா பள்ளிவாசலில் அஞ்சலிக்காக வைக்கப்படும். எஸ்.எம்.பாக்கா் உடலுக்கு, மாலை 4 மணிக்கு ராயப்பேட்டை புதுக் கல்லூரி பள்ளிவாசலில் இறுதித் தொழுகை நடத்தப்படுகிறது. பின்னா் ராயப்பேட்டை அடக்கஸ்தலத்தில் எஸ்.எம்.பாக்கா் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாக்கா்  மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவா்கள் உள்பட பலா் இரங்கல் தெரிவித்துள்ளனா். 

முதல்வா் ஸ்டாலின் இரங்கல்: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவா் எஸ்.எம்.பாக்கா்  மறைவு செய்தியறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினா், அமைப்பினா், உறவினா்கள் மற்றும் நண்பா்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் இரங்கல்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவரும் என் உடன் பிறவா சகோதரருமான எஸ் எம் பாக்கர் அவர்கள் சற்று முன் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை தெரிவிப்பது சொல்லொணா துக்கத்தை ஏற்படுத்துகின்றது.

எம்ஜிகே நிஜாமுதீன்(ஜம்மியத் உலமா ஹிந்த் செயலா்: இனிய நண்பரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவருமான எஸ்எம் பாக்கரின் மரணச் செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. சமுதாயத்துக்காக இரவு-பகல் பாராது அயராது உழைத்தவரையும்,  எல்லோருக்காகவும்  களமாடியவரையும் நாடு இழந்துள்ளது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.  

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset