நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் பலி: வெல்பேர் கட்சி கண்டனம்

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் பலியான செய்தி பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே நல்ல சாராயத்தை விற்கிறோம் என்ற அரசின் நியாயங்கள் தோல்வியடைந்து நிற்கின்றது. 

இந்த மரணங்களுக்கு தமிழ்நாடு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று வெல்பேர் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் அப்துர் ரஹ்மான் கூறினார். 

போதைப் பொருட்களும் மதுவும் தமிழ்நாட்டில் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுவது  பகுத்தறிவு பேசும் இம்மண்ணிற்கு அவமானம் ஆகும். 

இரும்புக் கரம்  கொண்டு போதை பழக்கத்தையும் வியாபாரத்தையும் ஒடுக்க வேண்டிய அரசும் காவல்துறையும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. 

குடி குடியை கெடுக்கும் என  பிரச்சாரத்தை செய்தால் மட்டும் போதாது. அதை அரசு முதலில் உணர வேண்டும். நல்ல சாராயமோ  கள்ள சாராயமோ, அனைத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு என்பதை உணர்த்துகிறோம் என்று K.S. அப்துல் ரஹ்மான் கூறினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset