நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயுதம் ஏந்திய கும்பல் நகைக் கடையில் கொள்ளை: காஜாங்கில் பட்டப்பகலில் பயங்கரம்

காஜாங்:

ஆயுதம் ஏந்திய நால்வர் அடங்கிய கும்பல் நகைக் கடையில் கொள்ளையடித்து தப்பியோடியது.

இந்த சம்பவம் நேற்று மாலை 3.17 மணியளவில் காஜாங்கில் உள்ள மெட்ரோ பிளாசாவில் நிகழ்ந்துள்ளது.

பாதுகாவலர் உடை, முகமூடியுடன் அப்பேரங்காடியில் நுழைந்த கும்பல் நகைக்கடையில் மேல் பகுதியை நோக்கி சுட்டது.

இதனை நகைக் கடை ஊழியர்களும் பொதுமக்களும் அவ்விடத்தை வீடு ஓடியுள்ளனர்.

உடனே அக்கும்பல் சுத்தியல் உட்பட இரும்பு பொருட்களை கொண்டு நகைகள் இருந்த கண்ணாடி பேளைகளை அடித்து உடைத்தனர்.

பின் நகைகளுடன் அக்கும்பல் காரில் தப்பியது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்த வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இச்சமவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை. இழப்புகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கொள்ளையர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது என்று காஜாங் போலிஸ்படை துணைத் தலைவர் முகமத் நஸிர் டிராஹான் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset