செய்திகள் தமிழ் தொடர்புகள்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டி இளைஞர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்தை மக்களவை உறுப்பினர் கனிமொழி வழங்கினார்
கோவில்பட்டி:
குவைத் நாட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டியைச் சேர்ந்த இளைஞர் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதியாக அறிவித்த ரூ.5 லட்சத்தை திமுக எம்.பி-யான கனிமொழி இன்று நேரில் வழங்கினார்.
கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் மாரியப்பன் (41). இவர் கடந்த 20 ஆண்டுகளாக குவைத் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் குவைத்தின் மங்கஃப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் அவரது நிறுவனம் ஒதுக்கித் தந்த அறையில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தார்.
இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 12-ம் தேதி அதிகாலை 6-வது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தது.
இதனால் பெரும் புகை ஏற்பட்டு குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் தீ பரவியது. இந்த விபத்தில் சிக்கி கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த மாரியப்பனும் காயமடைந்தார்.
அவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் கடந்த 15-ம் தேதி இந்திய விமானப்படை விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வானரமுட்டி கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு மாரியப்பன் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையே குவைத் அடுக்குமாடி தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று காலை கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் உள்ள மாரியப்பன் இல்லத்துக்கு திமுக மக்களவை உறுப்பினரான கனிமொழி சென்று மாரியப்பன் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, அவரது தாய் வீரம்மாள், மனைவி கற்பகவள்ளி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும், அரசின் ரூ.5 லட்சம் நிதியுதவிக்கான காசோலையையும் அவர்களிடம் வழங்கினர். அப்போது மாரியப்பன் மனைவி கற்பகவள்ளி தனக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி கனிமொழி எம்பி-யிடம் மனு கொடுத்தார். அதனை அவர் பெற்றுக்கொண்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 5:26 pm
இன்று கல்லறை திருநாள், நாளை முகூர்த்தநாள்: கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு
November 2, 2025, 11:19 am
அதிமுக தலைமைக்கு எதிராக யார் துரோகம் செய்தாலும் நடவடிக்கை: செங்கோட்டையன் நீக்கம் குறித்து இபிஎஸ் விளக்கம்
October 31, 2025, 11:51 am
‘செந்தமிழர் சீமான்’ என்று வாழ்த்தி முழக்கமிட்ட வைகோ: தொண்டர்கள் மகிழ்ச்சி
October 29, 2025, 5:59 pm
குப்பை ஊழலில் புதுவை முதல்வருடன் இருப்பவருக்கு தொடர்பு: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
October 27, 2025, 10:42 pm
கரூர் சம்பவம்; என்னை மன்னித்துவிடுங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்
October 27, 2025, 12:49 pm
மோன்தா புயல்: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
October 25, 2025, 3:19 pm
