நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

 2023-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு வீரராக மகுடம் சூடினார் மைக் மகேன் 

கோலாலம்பூர்:

2023-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு வீரராகத் தேசிய உடற்கட்டழகர் டத்தோ ஷாருல் அஸ்மான மகேன் அப்துல்லா மகுடம் சூடினார். 

ஆசிய மற்றும் உலகக் கட்டழகர் போட்டிகளில் இதுவரை 6 முறை வாகை சூடியப் பெருமையும் இவரையே சாரும். 

இதற்கு முன்னர், கடந்த 2016, 2017, 2018, 2019, 2022 ஆகிய அந்து ஆண்டுகளில் அவரின் பெயர் தேசிய விளையாட்டு வீரருக்காக முன்மொழியப்பட்டப் போதிலும் இம்முறைதான் அவர் தேசிய விளையாட்டு வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். 

இந்த விருதை வெல்லும் தனது கனவு இறுதியாக நனவாகியிருக்கும் தருணத்தைத் தன்னால் வார்த்தைகளால் கூற இயலவில்லை என்று மகேன் நேற்று நடைபெற்ற தேசிய விளையாட்டு விருதளிப்பு விழாவுக்குப் பின் செய்தியாளர் சந்திப்பில் மனம் நெகிழ்ந்தார்.

2022-ஆம் ஆண்டில் வியட்நாமில் நடைபெற்ற 31-ஆவது வியட்நாம் SEA விளையாட்டுகளில் உடல் கட்டழகர் பிரிவில் மகேன் தங்கப்பதக்கத்தை வென்றார். 

2022-ஆம் ஆண்டில் மலேசிய எழுத்தாளர்கள் சங்கத்தின் (SAM) சிறந்த தடகள வீரராகவும் மைக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பல சாதனைகளைப் படைத்த மகேன், தனது 51 வயதில் கடந்த மார்ச் மாதம் தனது ஓய்வை அறிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset