நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மலேசியத் தமிழர்களின் உச்சரிப்பை கிண்டலடித்து சர்ச்சையில் சிக்கியுள்ள விஜய் டிவி புகழ், குரேஷி: அஸ்ட்ரோவுக்கு வலுக்கும் கண்டனம் 

கோலாலம்பூர்:

மலேசியத் தமிழர்களின் உச்சரிப்பை கிண்டலடித்து விஜய் டிவியின் புகழ், குரேஷி ஆகியோர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் மலேசியத் தமிழர்கள் அதிகம் பார்ப்பது வழக்கம்.

இந்நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர்கள் தற்போது மலேசியாவுக்கு வந்து செல்வதும் வழக்கமாகி விட்டது.

கடைசியாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் போது மலேசியாவில் புகழ்பெற்ற நாசி கோரேங் உணவு சமைக்கப்பட்டது.

அப்போது புகழ், குரோஷி ஆகியோர் மலேசியத் தமிழர்களை போன்று கிண்டலாக பேசினார்கள்.

ஆனால் அவர்கள் பேசியதற்கும் மலேசியத் தமிழர்களின் உச்சரிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.

குறிப்பாக மலேசியத் தமிழர்களை அவமதிக்கும் வகையில் அவர்களின் செயல்கள் அமைத்துள்ளன.

இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அதே வேளையில் தணிக்கை செய்யாமல் அதை ஒளிப்பரப்பிய அஸ்ட்ரோவுக்கும் அவர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அஸ்ட்ரோ என்ன பதில் அளிக்கப்போகிறது என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset