நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த அலை வீசுமா? வெல்லப் போவது யார்?

விருதுநகர்: 

விருதுநகர் தொகுதியில் இரண்டு முறை காங்கிரஸ்-திமுக கூட்டணி வேட்பாளராக ஜெயித்த மாணிக்கம் தாகூர் மூன்றாவது முறையும் வெல்வாரா? அல்லது நடிகர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் அதிரடி படைப்பாரா?  என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.

இதே தொகுதியில் நடிகர் சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமாரும் பிஜேபி சின்னத்தில் போட்டியிடுவதால் இது நட்சத்திர தொகுதியாகப் பார்க்கப்படுகின்றது.

விருதுநகர் தொகுதியில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை என்று மொத்தம் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அதோடு நான்கு தொகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர்.

வழக்கமாகவே திராவிட கட்சிகளின் கோட்டையாகவே விருதுநகர் தொகுதி இருந்து வருகிறது. திமுக, அதிமுக தவிர அதிமுகவுக்கு வாக்கு வங்கி உள்ள தொகுதி இது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரண்டு முறை எம்பியாக விருதுநகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அது தவிர அதிமுக மூத்த தலைவராக இருந்த காளிமுத்து இதே தொகுதியில் எம்பி யாக வெற்றி பெற்று இருக்கிறார்.அதே நேரத்தில் கடந்த 2009இல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று இருந்த நிலையில், 2014இல் அவர் போட்டியிட்டபோது தோல்வியுற்றார். 

மீண்டும் 2019 வெற்றி பெற்றிருக்கிறார். இந்த நிலையில் 2004 ஆம் ஆண்டும் மாணிக்கம் தாகூர் மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். இந்த முறை தமிழ்நாட்டு மட்டுமல்லாமல் அனைவரது கவனமும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் பக்கம் திரும்பியுள்ளது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset