நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மோடியின்  28 வினாடி வீடியோ: 5 கேமராக்களின் படப்பிடிப்பு; தியானம் செய்யும் ஆசனங்கள் மூன்று முறை மாறியிருக்கிறது: விமர்சகர்கள் கலாய்ப்பு 

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி, குமரி மாவட்டத்தின் சிறப்பான இடங்களில் ஒன்றான விவேகானந்தர் பாறைக்கு வந்து 45 மணி நேர தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று  இரவு 7 மணியளவில் தனது 45 மணி நேர தியானத்தைத் தொடங்கினார். இன்று காலை அவர் தியானம் செய்த புகைப்படங்களும் 28 வினாடிகள் ஓடும் விடியோவும் செய்தி ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

மோடியின் தியான விடியோ பற்றி பல்வேறு விமர்சனங்களும் சமூக ஊடகங்களில் வரத்தொடங்கிவிட்டது. அதில் சிலர், 28 வினாடி  விடியோவில், 9 இடங்களிலிருந்து கேமராக்கள் படம்பிடித்துள்ளன. தியானத்தை மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு தியான விடியோவில், அவர் தியானம் செய்யும் இடம் மூன்று முறை மாற்றப்பட்டுள்ளது. அவர் தியானம் செய்யும் ஆசனங்கள் மூன்று முறை மாறியிருக்கிறது.

இவை அனைத்தும் வெறும் 28 வினாடி விடியோவுக்குள் நிகழ்ந்துள்ளது என்று பலவாறு விமரிசனங்கள் எழுந்துள்ளன. 

நெட்டிசன்கள் மோடியின் வீடியோவை கலாய்த்து வருகின்றார்கள்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset