நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மோடியின் கன்னியாகுமரி தியானத்துக்கு காங்கிரஸ், திமுக எதிர்ப்பு

புது டெல்லி: 

காபந்து அரசின் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்வது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என்று காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.

இதற்கு அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாரளித்தது.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் வியாழக்கிழமை மாலையுடன் ஓய்கிறது.

இதையடுத்து, பராமரிப்பு அரசின் பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு வியாழக்கிழமை மாலை வருகிறார்.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இருநாள்கள் தங்கியிருந்து, பராமரிப்பு அரசின் பிரதமர் தனிமையில் தியானம் மேற்கொள்கிறார்.

45 மணி நேரம் அவர் தியானத்தில் ஈடுபடுகிறார்.

தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்து 48 மணி நேரத்துக்கு எந்தவித பிரசார நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என சட்டம் இருப்பதாகவும், இதை மீறி மோடி தியானத்தில் ஈடுபட்டு அதை தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்பி தந்திரமாக செயல்படுவதாகவும் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாரளித்தது.

காபந்து பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ளும் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் புகார் அளிக்கும் என்று அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்வதை ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பப்படுவதை தடை செய்ய வேண்டும் என  தலைமை தேர்தல் ஆணையருக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பி உள்ளார்.
இதேபோல், மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் திமுக மனு அளித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset