நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

புரி ஜெகன்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டதா?: மோடியின் சர்ச்சை பேச்சு 

புரி:

புரி ஜெகன்நாதர் கோயிலில் கடவுள்களின் தங்க நகைகள், ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ள பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கும் என பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டு சாவிகள் உள்ள அந்த பொக்கிஷ அறையின் ஒரு சாவி காணால் போனதாக 2018-இல் தெரியவந்தது.
எனினும், மற்றொரு சாவி ஒடிஸா அரசிடம் உள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக அந்த அறை திறக்கப்படவில்லை.

இந்நிலையில், பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கும் என பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார்.

ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஆலோசகரான தமிழகத்தைச் சேரந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி.கே.பாண்டியனை குறிப்பிடும் வகையில் இதை மோடி தெரிவித்தார்.

இது தமிழக மக்கள் மீது திருட்டு பழியை சுமத்தும் செயல் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மோடிக்கு கண்டனம் தெரிவித்தார்.

இதனிடையே,  தொலைந்துபோனதாக  சாவிகளை பிரதமர் மோடி தனது அறிவாற்றலைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கட்டும் என வி.கே.பாண்டியன் தெரிவித்தார்.

அளவற்ற அறிவாற்றலைப்  பெற்றுள்ள பிரதமர் மோடி புரி ஜெகன்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகளை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் கோயில் அறையின் சாவிகள் தொலைந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.  அதை 10 ஆண்டுகள் கூட்டணி ஆட்சியின்போது பாஜக அமைச்சர்கள் இதை மேற்பார்வை செய்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset