நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மலேசியாவில் முதல் காலாண்டில் பிஎம்டபிள்யூ கார் விற்பனை 8 விழுக்காடு அதிகரிப்பு 

செர்டாங்:

மலேசியாவில் முதல் காலாண்டில் பிஎம்டபிள்யூ கார் விற்பனை 8 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதல் காலாண்டில் பிஎம்டபிள்யூ நிறுவனம் மொத்தம் 4,300 கார்களை விற்பனை செய்துள்ளது. 

கடந்தாண்டு இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடும் போது இவ்வாண்டு விற்பனை 8% விழுக்காடு அதிகரித்துள்ளது.

நாட்டில் மொத்தம் 370 மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று பிஎம்டபிள்யூ நிர்வாக இயக்குனர் பெஞ்சமின் நாகல் கூறினார்.

இந்த விற்பனை கடந்த ஆண்டை விட 26 சதவீதம் அதிகமாகும்.

2024-ஆம் ஆண்டின் மத்தியில் பிஎம்டபிள்யூ தனது கார் விற்பனையை விரிவுபடுத்துவதன் மூலம் மலேசியாவின் முதன்மையான பிரீமியம் வாகனங்களை வழங்குவதில் தனது நிலையைத் தக்க வைக்க முடியும் என்றார் அவர்.

மலேசியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, ஒவ்வொரு தனிநபரின் விருப்பமான ஓட்டுநர் பாணியைப் பராமரிக்கும் அதே வேளையில், இணையற்ற ஆற்றல்மிக்க ஓட்டுநர் அனுபவத்தை வழங்க பிஎம்டபிள்யூ நிறுவனம் கடமைப்பட்டுள்ளது. 

உலகின் முன்னணி பிரீமியம் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான  பிஎம்டபிள்யூ நிறுவனம், பிஎம்டபிள்யூ, மினி, ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ மோட்டார்ட் ஆகிய நான்கு வாகன பிராண்டுகளைக் கொண்டுள்ளது.

கார் கண்காட்சியில் இரண்டு புதிய BMW 5 சீரிஸ் மாடல்களை அறிமுகப்படுத்தியது. அனைத்து-புதிய BMW i5 M60 xDrive மற்றும் உள்நாட்டில் தயார் செய்யப்பட்ட BMW 520i வகை கார்கள் RM340,000 முதல் RM480,000 வெள்ளிக்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

பிரீமியம் கார்களுக்காக, MINI மலேசியா தனது புதிய மின்சார MINI கண்ட்ரிமேன் SE ALL4, புதிய MINI JCW கண்ட்ரிமேன் ALL4 மற்றும் புதிய MINI கூப்பர் S ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியது. இதன் விலை RM260,000 முதல் RM399,000 வரை ஆகும். 

BMW Motorrad மோட்டார் சைக்கிள் பிரிவுக்கான புதிய மாடல்களையும் அறிமுகப்படுத்தியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset