
செய்திகள் மலேசியா
பத்துமலை இந்திய கலாச்சார மையம் 2 அல்லது 3 மாதங்களில் பூர்த்தியாகும்: டான்ஶ்ரீ நடராஜா
பத்துமலை:
பத்துமலை இந்திய கலாச்சார மையம் அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் பூர்த்தியாகும்.
ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.
இந்தியர்களின் கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தேவஸ்தானத்தின் முக்கிய இலக்காக உள்ளது.
இதன் அடிப்படையில் தான் பத்துமலையில் இந்திய கலாச்சார மையத்தை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த கலாச்சார மையத்தின் கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிவடைந்துவிட்டது.
இன்னும் எஞ்சிய பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஆகவே அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் அப் பணி பூர்த்தியாகும்.
இந்நிலையில் இக் கலாச்சார மையத்தில் வைக்கும் நோக்கில் இந்திய பாரம்பரிய இசை வாத்தியங்களை தேவஸ்தானம், மலேசியாவுக்கான இந்திய தூதரகத்திடம் கோரியது.
அதன் அடிப்படையின் இசை வாத்தியங்களை இந்திய தூதரகம் வழங்கியது.
இவ்வேளையில் தூதர் பிஎன் ரெட்டி, துணைத் தூதர் சுபாஷினி ஆகியோருக்கு தேவஸ்தானத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்திய கலாச்சார, பாரம்பரிய விவகாரங்களில் தேவஸ்தானம் தொடர்ந்து இந்திய தூதரகத்துடன் இணைந்து செயல்படும் என்று டான்ஶ்ரீ நடராஜா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 3, 2025, 2:04 pm
அனைத்து இனங்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மடானி அரசு உறுதியாக உள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
August 3, 2025, 1:20 pm
ஷாரா மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்: பிரதமர்
August 3, 2025, 11:15 am
மூன்றுநாள் தொழில்துறை கல்வி முகாம்: 30ஆயிரம் ரிங்கிட் வழங்கினார் சிவநேசன்
August 3, 2025, 10:14 am
டத்தோஸ்ரீ சரவணனின் கூற்று குறித்து கவலைப்படத் தேவையில்லை; அது அவரது தனிப்பட்ட கருத்து: ஜொஹாரி
August 3, 2025, 10:10 am