நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி உத்தரவு

சென்னை:

பாமக-வுக்கு எதி​ராக செயல்​பட்​ட​தாகச் சொல்லி அக்​கட்​சி​யில் இருந்து ஜி.கே.மணியை நீக்கி கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி உத்​தர​விட்​டுள்​ளார்.

ராம​தாஸ் ஆதர​வாள​ரும், அவரது அணி​யில் கட்​சி​யின் கவுரவ தலை​வ​ரு​மான ஜி.கே.மணி தான், தந்தை - மகன் மோதலுக்​குக் காரணம். 

ஜி.கே.மணி துரோகம் செய்​திருக்​கி​றார் என பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களை அன்​புமணி முன்​வைத்து வந்​தார். பதி​லுக்​கு, ஜி.கே.மணி​யும், அன்​புமணி மீது குற்​றச்​சாட்​டு​களை தெரி​வித்​தார்.

இதனைத் தொடர்ந்​து, பாமக-வுக்கு விரோத​மாகச் செயல்​படு​வ​தால், கட்​சி​யின் அடிப்​படை உறுப்​பினர் பொறுப்​பில் இருந்து உங்​களை ஏன் நீக்​கக்​கூ​டாது என ஜி.கே.மணிக்​கு, அக்​கட்​சி​யின் ஒழுங்கு நடவடிக்​கைக் குழு நோட்​டீஸ் அனுப்​பியது. இதற்கு ஜி.கே.மணி பதில் அளிக்​க​வில்​லை. 

இந்​நிலை​யில், நேற்று பாமக-​வில் இருந்து ஜி.கே.மணியை நீக்​கி, அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக பாமக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: 

பாமக-​வின் பென்​னாகரம் தொகுதி சட்​டப்​பேரவை உறுப்​பினர் ஜி.கே.மணி, கட்​சி​யின் நலனுக்​கும், கட்சி தலை​மைக்​கும் எதி​ராக செயல்​பட்டு வரு​கி​றார். 

அதற்​காக கட்​சி​யின் அமைப்பு விதி​யின்​படி, அடிப்​படை உறுப்​பினரில் இருந்து அவரை ஏன் நீக்​கக்​கூ​டாது என்​பது குறித்து ஒரு வாரத்​துக்​குள் விளக்​கம் அளிக்​கும்​படி அவருக்கு கட்​சி​யின் ஒழுங்கு நடவடிக்​கைக் குழு​வால் கடந்த 18-ம் தேதி அறிவிக்கை அனுப்​பப்​பட்​டிருந்​தது.

அவருக்கு அளிக்​கப்​பட்ட காலக்​கெடு டிசம்​பர் 25-ம் தேதி​யுடன் முடிவடைந்த நிலை​யில், அவரிடம் இருந்து எந்த விளக்​க​மும் வரவில்​லை. கட்சி விரோத செயல்​பாடு​கள் குறித்து ஜி.கே.மணி எந்த விளக்​க​மும் அளிக்​காத நிலை​யில், அடிப்​படை உறுப்​பினரிலிருந்து அவரை நீக்​கலாம் என்று கட்​சி​யின் தலை​வர் அன்​புமணிக்கு ஒழுங்கு நடவடிக்​கைக் குழு பரிந்​துரைத்​தது. 

அதை ஏற்று ஜி.கே.மணி கட்​சி​யின் அடிப்​படை உறுப்​பினரிலிருந்து டிசம்​பர் 26-ஆம் தேதி முதல் நீக்​கப்​படு​வ​தாக கட்சி தலை​வர் அன்​புமணி அறி​வித்​திருக்​கி​றார். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதனிடையே, இது தொடர்​பாக சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய ஜி.கே.மணி, “46 ஆண்டு கால​மாக ராம​தாஸூடன் பயணிக்​கிறேன். 25 ஆண்டு கால​மாக கட்​சி​யில் தலை​வ​ராக இருக்​கிறேன். இது​போன்ற செய்தி வரு​கிறது என்​றால் சிரிப்​ப​தா, என்ன செய்​வது, என்ன சொல்​வது என்று தெரிய​வில்​லை. 

அன்​புமணியை கட்​சியை விட்டு நீக்​கி​விட்​ட​தாக ராம​தாஸ் தெரி​வித்​துள்​ளார். அப்​படி இருக்​கை​யில், அடிப்​படை உறுப்​பினர் கூட இல்​லாமல் இருக்​கும் ஒரு​வர் என்னை எப்​படி கட்​சியி​லிருந்து நீக்க முடி​யும்? 

அன்​புமணிக்கு யாரை​யும் நீக்​கு​வதற்கு அதி​காரம் இல்​லை. நீக்​கு​வதற்​கு, சேர்ப்​ப​தற்​கு, பொறுப்பு கொடுப்​ப​தற்​கான அதி​காரம் ராம​தாஸுக்கு மட்​டுமே உள்​ளது” என்று தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset