செய்திகள் தமிழ் தொடர்புகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் கண்டனத்துக்குரியது: முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை:
சட்டிஸ்கர், அசாம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அஸ்ஸாமில் நல்பாரி மாவட்டத்தில் அமைந்துள்ள புனித மேரி பள்ளிக்கூட வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குடில்களை வி எச் பி, பஜ்ரங்தள் தொண்டர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர்.
அதேபோல் ஜபல்பூரிலும் ராய்ப்பூரிலும் ஹிந்து அமைப்பினர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது.
பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.
மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது.
எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும். இவ்வாறு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 24, 2025, 7:28 am
“விஜய் குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை”: பாஜக தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன்
December 23, 2025, 11:26 pm
எஸ் டி கூரியர் இணை இயக்குனரும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் சகோதரருமான சிராஜூத்தீன் காலமானர்
December 23, 2025, 12:58 pm
சென்னை விமான நிலையத்தில் போதிய விமானங்கள் இல்லை: பயணிகள் கடும் அவதி
December 22, 2025, 2:04 pm
மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்டார்
December 22, 2025, 8:25 am
திருப்பரங்குன்றத்தில் தொழிலாளியைத் தாக்கி பாஜவினர் அராஜகம்
December 21, 2025, 11:23 pm
முதல்வருடன் ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் சந்திப்பு
December 21, 2025, 10:46 pm
R.E முஹம்மது காசிமின் பேரர் கல்வித் தந்தை R.E.M.S.அப்துல் மஜீது காலமானார்
December 21, 2025, 7:45 am
