நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

T 20 உலகக் கிண்ணத்தை நிச்சயம் வெல்வோம்: இலங்கை அணி உறுதி

கொழும்பு:

டி 20 உலகக் கோப்பை குறித்த மக்களின் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷனக தெரிவித்துள்ளார்.

T 20 உலகக் கிண்ணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று (14) இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

"எமது அணி நன்றாக பயிற்சி செய்து இருக்கிறது. ஒரு நல்ல போட்டிக்கு செல்கிறோம். மக்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்ற முயற்சி செய்வோம். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன் நடைபெற்ற போட்டியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக கலந்து கொண்டார்கள்.

அணிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கிறது. சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்களின் நல்ல ஒற்றுமை உள்ளது. இம்முறை மிகவும் எங்கள் அணியின் ஆட்டம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று அவர் கூறினார்.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset