
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை விமான நிலையத்திலிருந்து செல்ல வேண்டிய சிங்கப்பூர், கொல்கத்தா, உள்ளிட்ட 8 விமானங்கள் ரத்து
சென்னை:
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன கேபின் குழு ஊழியர்கள் 3-வதுநாளாக நேற்றும் திடீர் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர், கொல்கத்தா, உள்ளிட்ட 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தோடு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமும் இணைந்துள்ளது. இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் கேபின் குழு ஊழியர்களுக்கும், ஏர் இந்தியா நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கேரளா உட்பட சிலமாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேபின் குழு ஊழியர்கள் திடீர் விடுப்புகள் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமானங்களை இயக்க விமானிகள், பொறியாளர்கள் இல்லாத காரணத்தால், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில்கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து புதன்கிழமை அதிகாலை திருவனந்தபுரம் புறப்பட்டு செல்லும் 2 விமானங்கள், சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன. மற்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று, சென்னை விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானநிறுவனத்தின் கேபின் குழு ஊழியர்கள் பலர் திடீர் விடுப்பு எடுத்துவிட்டு பணிக்கு வராத காரணத்தால், விமானங்களை இயக்க விமானிகள், பொறியாளர்கள் இல்லாமல், மொத்தம் 8 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியாஎக்ஸ்பிரஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல திருவனந்தபுரம், கொல்கத்தாவில் இருந்து சென்னை வர வேண்டிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து திருவனந்தபுரம், கொல்கத்தா மற்றும் சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் நேற்று பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 5:53 pm
தூத்துக்குடியில் மிதவை கப்பலின் டேங்கை சுத்தம் செய்த 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
September 17, 2025, 4:04 pm
பெரியார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
September 15, 2025, 12:26 pm
வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை
September 13, 2025, 2:27 pm
விஜய் வருகையால் அதிர்ந்த திருச்சி: மரக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
September 13, 2025, 7:32 am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
September 12, 2025, 9:08 pm
நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
September 11, 2025, 10:54 pm
ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும்: சீமான்
September 10, 2025, 1:43 pm