நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னையைத் துரத்தும் நாய்கள்: ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய்களுக்குத் தடை

சென்னை:

தமிழகத்தில் தெரு நாய்களின் இனப்பெருக்கம் மிகவும் அதிகரித்துவிட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். அவற்றை பிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் நாய்களின் தொல்லை அதிகரித்துவிட்டதோடு அவை பொது மக்களை கடிக்கவும் தொடங்கியுள்ளன. 

ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தற்போது வளர்ப்பு பிராணியாக இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண், பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Activists urge Chennai Corporation to adopt a systematic approach to manage street  dogs - The Hindu

சென்னையில் நாய்களின் பெருக்கம் அதிகரித்துவிட்டது. அவை பல இடங்களில் பொதுமக்களை கடிக்க ஆரம்பித்து பிரச்சினை பெரிதாகி விட்டது. எனவே சென்னை மாநகராட்சி தெரு நாய்களை பிடித்து அவற்றிற்கு கருத்தடை செய்ய முடிவெடுத்துள்ளது. 

நேற்று நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வடுகம் ஆதிதிராவிடர் காலனி சாலையில், நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வெறிநாய் ஒன்று விளையாடிக்கொண்டு இருந்த தேஜேஸ்வரன் (5), பிரியதர்ஷினி (11), யாகவீர் (5) ஆகிய 3 குழந்தைகளை கடித்துள்ளது. 

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த பெற்றோர்கள், வெறிநாய் கடித்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

பின்னர், நாய் கடித்ததில் படுகாயமடைந்த 3 குழந்தைகளையும் உடனடியாக மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு நாய் தொல்லைக்கு முடிவு கட்ட முன் வந்துள்ளது. 

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset