நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

21 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது 

ஈப்போ: 

கடந்த வெள்ளிக்கிழமை தைப்பிங், ஜாலான் மேடான் சிம்பாங் அருகே காரில் 21 கிலோகிராம் எடையுள்ள ஹெராயின் போதைபொருள் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

41, 47 வயதுடைய சந்தேக நபர்களை பேராக் காவல்துறை தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினர் இரவு 11.15 மணியளவில் கைது செய்ததாகப் பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி கூறினார். 

சந்தேக நபரின் காரைச் சோதனை செய்ததில், 46 பிளாஸ்டி பொட்டலங்கள் அடங்கிய ஒரு வெள்ளை நிற கோணியில் 21,037 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

இதன் மதிப்பு 262,275 வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணையின் அடிப்படையில், இந்தச் சந்தேக நபரின் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் இவ்வாண்டு பிப்ரவரி 2024-ஆம்  தேதி முதல் இதுவரை பேராக்கின் வடக்குப் பகுதியிலிருந்து பெறப்பட்ட போதைப்பொருள் விநியோகத்துடன் செயல்பட்டதாக நம்பப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பேராக்கில் உள்ள உள்ளூர் சந்தையில் விநியோகிக்கப்படுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அபாயகரமான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதாகவும் இரு சந்தேக நபர்களும் விசாரணைக்கு உதவுவதற்காக மே 9-ஆம் தேதி வரை ஆறு நாட்கள் காவலில் வைக்கப்பட்டதாகவும் முஹம்மத் யூஸ்ரி கூறினார்.

நடத்தப்பட்ட சிறுநீர் ஸ்கிரீனிங் சோதனையில் இருவரும் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset