நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா சுயநலக் கட்சி அல்ல; சமுதாய நலன் என்ற அடிப்படையில் ஒற்றுமை அரசின் வேட்பாளரை ஆதரிக்கிறோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோல குபு பாரு -
மஇகா சுயநலக் கட்சி அல்ல. சமுதாய நலன் என்ற அடிப்படையில் ஒற்றுமை அரசின் வேட்பாளரை ஆதரிக்கிறோம்.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

ஒற்றுமை அரசாங்கத்தையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரையும் ஆதரிக்கும் என மஇகா ஆரம்பத்திலேயே தீர்க்கமாக முடிவு செய்து விட்டது.

இதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரதமருக்கு தான் நமது ஆதரவு. அதற்கு பின் தான் மஇகா தனது அடுத்தக்கட்ட முடிவை எடுக்கும்.

ஆகவே வரும் கோல குபு பாரு சட்டமன்றத் தேர்தலின் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளரை மஇகா ஆதரிக்கிறது. 

அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு என ஓர் ஆட்சிக் குழு உறுப்பினர் உள்ளார்.

அதே வேளையில் இப்போது ஒற்றுமை அரசுக்கு ஆதரவு தந்தால் சமுதாயத்திற்கு ஏதும் பிரச்சினை என்றால் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பலாம்.

ஆனால் அந்த பக்கம் சமுதாயத்திற்கு என குரல் கொடுக்க யார் இருக்கிறார்கள் என்பதை சமுதாயம் சிந்திக்க வேண்டும்.

அதே வேளையில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கூறுபவர்கள் எல்லாம் இங்கிருந்து பயன் பெற்றவர்கள் தான்.

ஆகவே இந்திய சமுதாயம் இந்த தேர்தலில் முழு விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலின் மஇகா தேர்தல் கேந்திரத்தை தொடக்கி வைத்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset