நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமூக ஊடங்களின் மூலம் ஓட்டுநர் உரிமை அட்டை வாங்கிய அந்நிய நாட்டினர் கைது

அலோர் ஸ்டார்: 

சமூக ஊடங்களின் மூலம் ஓட்டுநர் உரிமை அட்டை வாங்கிய வியட்நாமிய ஆடவரைச் சாலை போக்குவரத்துத் துறை கைது செய்துள்ளது. 

24 வயதான அந்த நபர் சமூக ஊடகங்களில் 2,000 வெள்ளிக்கு ஓட்டுநர் உரிமத்தை வாங்கியதாக நம்பப்படுவதாக கெடா மாநிலச் சாலை போக்குவரத்துத் துறை இயக்குநர் ஷாருல் அசார் மாட் டாலி தெரிவித்தார்.

ஏப்ரல் 9-ஆம் தேதி காலை 7.57 மணிக்கு புக்கிட் காயு ஹீத்தாமில் எல்லையில் நாட்டிற்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, ​​உரிமம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகக் கண்டறியப்பட்ட பின் விசாரணைக்கு உதவ வியட்நாமிய நபரைக் கைது செய்ததாக அவர் கூறினார். 

ஓட்டுனர் உரிமம் வேதியியல் துறைக்கு அனுப்பப்பட்டு அது போலியானது என்று கண்டறியப்பட்டதாக அவர்  கூறினார்.

இஃது இங்குப் பதிவு முதல் வழக்கு என்றும், தமது தரப்பு இது தொடர்பாக இன்னும் விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார். 

ஏனெனில் சம்பந்தப்பட்ட சமூக ஊடகம் வெளிநாட்டினருக்கு மட்டுமல்ல உள்ளூர் பொதுமக்களுக்கும் ஓட்டுநர் உரிமத்தை விற்பனை செய்துள்ளது. 

இதன் மூலம் வெளிநாட்டினர் ஓட்டுநர் சோதனை மற்றும் பயிற்சியின்றி எளிதாக உரிமம் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர் என்றார் அவர்.

1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 108 (3) (இ) பொய்மைப்படுத்தலின் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதாக ஷாருல் அசார் கூறினார்.

குற்றம்ம் நிரூப்பிக்கப்பட்டால் 5,000 முதல் 20,000 வெள்ளி வரை அபராதம் அல்லது ஒரு வருடம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் வழங்கப்படும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset