நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உயர் வளர்ச்சிக் கொண்ட நிறுவனங்களின் முதலீடு செய்ய கசானா 1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: பிரதமர்

கோலாலம்பூர்:

உயர் வளர்ச்சிக் கொண்ட நிறுவனங்களின் முதலீடு செய்ய கசானா நேஷனல் 1 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.

கசானா நேஷனல் புதிய நிதித் திட்டத்தை தொடங்கியுள்ளது.

புதுமையான உயர் வளர்ச்சி கொண்ட மலேசிய நிறுவனங்களில் முதலீடு செய்ய  1 பில்லியன்  ரிங்கிட்டை ஆரம்ப நிதியாக கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மலேஷியா வென்ச்சர் கேபிடல் பெர்ஹாட், பென்ஜானா கேபிடல் போன்ற முதலீட்டு நிறுவனங்களை கசானாவின் கீழ் மையப்படுத்துவதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக புதுமையான உயர் வளர்ச்சி கொண்ட மலேசிய நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக கசானா நேஷனல் ஒரு தேசிய நிதி திட்டத்தை தொடங்கும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் 

கோலாலம்பூர் 20 உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset