நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பிற்கு வழங்கப்பட்ட கூடுதல் உத்தரவு; அன்வாருக்குத் தெரியவில்லை என்று சொல்வது முட்டாள் தனம்: பெர்சத்து தலைவர் டான்ஶ்ரீ முஹைடின் யாசின் 

கோலாலம்பூர்: 

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அப்போதைய மாமன்னராக இருந்த அல்-சுல்தான் அப்துல்லா வழங்கிய கூடுதல் உத்தரவு தொடர்பாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஒன்றும் தெரியவில்லையா ? இது மடானி அரசாங்கத்தின் முட்டாள் தனத்தைக் காட்டுவதாக பெர்சத்து கட்சியின் தேசிய தலைவர் டான்ஶ்ரீ முஹைடின் யாசின் கூறினார். 

கூடுதல் உத்தரவு தொடர்பாக அறிவிப்பினை அரசாங்கம் ஏன் மறைத்தது என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் மடானி அரசாங்கம் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான முஹைடின் கேட்டுக்கொண்டார். 

நஜிப் ரசாக் அரச மன்னிப்பு விவகாரத்தில் மடானி அரசாங்கம் முழுமையாக எதனையும் அறிந்திருக்கவில்லை. பிரதமருக்கே இந்த விவகாரம் பற்றி தெரியவில்லை என்றால் இது அவரின் அறியாமையைத் தான் காட்டுவதாக உள்ளது என்று முன்னாள் பிரதமருமான அவர் சாடினார். 

முன்னதாக, நஜிப் ரசாக்கிற்கு கூடுதல் உத்தரவு விவகாரம் தொடர்பில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஈடுபடமாட்டார் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. 

அரச மன்னிப்பு வாரியம் என்பது கூட்டரசு அரசியலமைப்பு மன்னிப்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அத்துடன் மலாய் ஆட்சியாளர்களும் மாமன்னரும் இதில் இடம்பெற்றுள்ளனர். ஆகையால், அரசாங்கம் சார்பாக பிரதமர் என்ற முறையில் இந்த விவகாரத்தில் தாம் ஈடுபட விரும்பவில்லை என்று அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்தார். 

முன்னாள் பிரதமர் தமது எஞ்சிய சிறை காலத்தை வீட்டில் இருந்தே கழிக்கலாம் என்று வகை செய்யும் கூடுதல் உத்தரவை முன்னாள் மாமன்னர் உத்தரவைப் பிறப்பித்திருந்தார். ஆனால்  இந்த விவகாரத்தை அரசாங்கம் பொதுவெளியில் வெளியிடாதது பெரும் சர்ச்சையை வெடித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset