நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலகுபு பாரு இடைத்தேர்தலில் மசீச பங்கேற்காதது ஒற்றுமை அரசாங்கத்திற்கு அழகல்ல: அரசியல் நிபுணர்கள் கருத்து 

கோலாலம்பூர்: 

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் ம.சீ.ச ஒற்றுமை அரசாங்கம் சார்பாக களமிறக்கப்படும் வேட்பாளருக்குப் பிரச்சாரங்களை மேற்கொள்ளாது என்று கூறியிருப்பது பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் லாவ் ஷெ வேய் கூறினார். 

மசீசவின் இந்த அரசியல் நிலைப்பாடு என்பது தேசிய முன்னணிக்கும் அதன் உறுப்பு கட்சிகளுக்கும் இடையிலான சுமுகமான உறவில் விரிசல் ஏற்படும் என்பதோடு நம்பிக்கை கூட்டணியுடனான உறவில் சிக்கல் ஏற்படும் சூழலும் நிலவுகிறது. 

எந்தவொரு அரசாங்க பதவிகளில் இல்லாவிட்டாலும் ஒற்றுமை அரசாங்கத்தில் ம.சீ.ச அங்கம் வகிக்கிறது.  தேசிய முன்னணி அல்லாத ஒருவரை கோலகுபு பாரு சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறக்கினால்  மசீச தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ளாது என்று தெரிவித்திருந்தது. 

மசீச கட்சியினால் இந்த கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்த முடியவில்லை. இதன் காரணமாகதான் ம.சீ.ச கட்சி இந்த தேர்தலிலிருந்து அங்கம் வகிக்க வேண்டாம் என்று முடிவெடுத்ததாக அகாடெமி நுசந்தாராவைச் சேர்ந்த அஸ்மி ஹசான் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset