நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈரான் தூதரகத்தை அடுத்து சிரியாவில் அமெரிக்க இராணுவ தளம் மீது ட்ரோன் தாக்குதல்

டமாஸ்கஸ்:

சிரியாவில் அமெரிக்க இராணுவ தளம் மீது திடீரென்று ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், உயிர் அபாயம் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

சும்மர் நகரை நோக்கி ஐந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இரண்டு ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. 

பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து ஈராக்கில் உள்ள ஈரானிய ஆதரவு குழுக்கள் அமெரிக்க தரப்பினருக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தியுள்ள நிலையில்,

அமெரிக்கப் படைகளுக்கு எதிரான இந்த தாக்குதல் முதல் முறையாகும். மட்டுமிறி, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி அமெரிக்காவிற்கு சென்று  அதிபர் ஜோ பைடனை சந்தித்து விட்டு நாடு திரும்பிய அதே நாளில் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இரண்டு பாதுகாப்பு வட்டாரங்கள் மற்றும் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், பின்புறத்தில் பொருத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சருடன் ஒரு சிறிய லொறி சிரியா எல்லையில் நிறுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

ராக்கெட் ஏவப்பட்ட நிலையில், அந்த லொறியும் வெடித்துச் சிதறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் முன்னெடுத்துள்ள சம்பவம் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றத்தை உருவாக்கியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset