நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரானை திருப்பி தாக்க வேண்டாம்: இஸ்ரேலுக்கு மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தல்

ஜெருசலேம்: 

இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று ஈரானுக்கு மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இது குறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, இந்தத் தாக்குதலுக்கான எதிர்வினைகளை மிகவும் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும் எனவும், பிராந்தியத்தில் போர்ப் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும் நெதன்யாகுவிடன் அதிபர் பைடன் வலியுறுத்தினார் என்றார் அவர்.

மேலும், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதில் அமெரிக்கா பங்கேற்காது.

ஈரான் ஏவுகணைகளிலிருந்து இஸ்ரேலைப் பாதுகாப்பதற்கு மட்டும் அமெரிக்கா உதவும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதனிடையே, தங்களது துணைத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க ஈரானுக்கு உரிமை உள்ளது என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் கேமரூன் கூறினார்.

ஈரான் மீது தாக்குதல் நடத்தி போர் பதற்றத்தை அதிகரிக்க  வேண்டாம் என்று இஸ்ரேலை பிரான்ஸும் வலியுறுத்தி உள்ளது.

ஈரான் எல்லையிலிருந்து இஸ்ரேல் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும். 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகளும் 500க்கும் மேற்பட்ட ட்ரோன்களும் இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset