நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்‌ரேலுக்கு முழு ஆதரவு தெரிவிக்கும் ஜி-7 நாடுகள்

ரோம்: 

இஸ்‌ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதையடுத்து, ஜி-7 நாடுகள் இஸ்‌ரேலுக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன.

ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அவை கடும் கண்டனம் தெரிவித்தன.

மத்திய கிழக்கை மேலும் நிலைகுலையச் செய்யும் நடவடிக்கைகளில் ஈரான் இறங்கியிருப்பதாகவும் இப்பிரச்சனையை எதிர்கொள்ள கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கத் தயாராக இருப்பதாகவும் ஜி-7 நாடுகள் தெரிவித்துள்ளன.

ஈரானும் அதன் ஆதரவின்கீழ் செயல்படும் அமைப்புகளும் இஸ்‌ரேலுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவை கூறின.

மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிநிலையை முடிவுக்குக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும் என்று ஜி-7 நாடுகள் உறுதி அளித்துள்ளன.

ஜி-7 நாடுகளில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, கனடா ஆகியவை அடங்கும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset