நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மே 15ஆம் தேதி பதவி விலகுகிறார்

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அடுத்த மாதம் 15ஆம் தேதி பதவி விலகுகிறார். 

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பார்.

வோங்கிற்கும் அவரது குழுவினருக்கும் முழு ஆதரவு கொடுக்கும்படி லீ தமது முகநூல் பதிவில் கேட்டுக் கொண்டார்.

அவர்களுடன் இணைந்து பணியாற்றி சிங்கப்பூருக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தலைமைத்துவ மாற்றம் எந்த ஒரு நாட்டுக்கும் முக்கியமான தருணம்;  வோங்கும் அவரது நான்காம் தலைமுறைத் தலைவர்களும் மக்களின் நம்பிக்கையைப் பெறக் கடுமையாக உழைத்திருக்கின்றனர் என்றார் பிரதமர் லீ. 

குறிப்பாக கோவிட்-19 காலக்கட்டத்தைச் சுட்டினார் அவர்.

சிங்கப்பூர் தொடர்ந்து சிறந்த முறையில் செயலாற்றவும் முன்னோக்கிச் செல்லவும் ஆன அனைத்தையும் செய்ய நான்காம் தலைமுறைத் தலைவர்கள் கடப்பாடு தெரிவித்திருக்கின்றனர்.

அவை எப்போதும் அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கும் என்றார்  லீ.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset