செய்திகள் உலகம்
இஸ்ரேலுக்கு ஆதரவளித்தால் அமெரிக்காவை தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை
ஜெருசலேம்:
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேலை அமெரிக்கா ஆதரித்தால், அப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்குவோம் என ஈரான் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் முகமது பகேரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என முகமது பாகேரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
200க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலை விட பெரிய அளவிலான பதில் இருக்கும் என்று மேஜர் ஜெனரல் கூறினார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியான் நாட்டில் உள்ள தூதுவர்களிடம் கூறுகையில், இஸ்ரேல் மீதான வான்வழித் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே அண்டை நாடுகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இஸ்ரேல் மீது மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலை நடத்தப்போவதாக அமெரிக்காவிற்கும் சில நாட்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மீண்டும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாவிட்டால் இந்த நெருக்கடி இத்துடன் முடிவுக்கு வரும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am