நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரான் வான்வழி தாக்குதல்;  இஸ்ரேலுக்கு 1.35 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு 

பைத்துல்முஹாத்தீஸ்: 

இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக ஈரான் நாட்டின் ட்ரோன்கள், வான்வழி தாக்குதல்கள் தொடர்பாக இஸ்ரேல் நாட்டிற்கு 1.35 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் ஏவிய ஏவுகனைகள், ட்ரோன்கள் மூலமாக தெல் அவிவ் நகரில் பல்வேறு வகையில் சேதங்கள் ஏற்பட்டதாக யெடிஓத் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. 

முன்னதாக, இஸ்ரேல் நாட்டின் மீது 350 ஏவுகணைகளும் ட்ரோன்களும் பாய்ச்சப்பட்டன. ஞாயிற்றுகிழமை அதிகாலையில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை இஸ்ரேல் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை. 

பாய்ச்சப்பட்ட ஏவுகணைகள், ட்ரோன்கள் யாவும் இஸ்ரேல் தரப்பினரால் மடைமாற்றம் செய்யப்பட்டது. இதனால் பில்லியன் கணக்கில் இழப்பு ஏற்பட்டது. 

இருப்பினும், பீர்ஷேபா பகுதிய்ல் உள்ள வான்வளி தளங்களில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக உலக நாடுகளின் வான் போக்குவரத்து அம்சங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset