நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

MyNewsHub சமூக ஊடகக் கணக்கு நடத்துபவரின் தொலைபேசி, சிம் கார்டை எம்சிஎம்சி பறிமுதல் செய்தது

புத்ராஜெயா:

MyNewsHub சமூக ஊடக கணக்கு நடத்துபவரின் தொலைபேசி, சிம் கார்டை எம்சிஎம்சி பறிமுதல் செய்தது.

சைபர்ஜெயாவில் உள்ள எம்சிஎம்சி தலைமையகத்தில் MyNewsHub சமூக ஊடக கணக்கு இயக்குனரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

சம்பந்தப்பட்ட நபர் ஒரு பழைய வீடியோ கிளிப்பை பதிவேற்றி மீண்டும் சமூக ஊடகப் பயனர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரின் வாக்குமூலம்  இரவு 8.40 மணிக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணைகள் நிறைவடைந்த பின்னர்  அதன் அறிக்கை அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக  சட்டத்துறை தலைவர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று எம்சிஎம்சி ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

முன்னதாக அரசாங்க தலைமை செயலாளர் ஸுக்கி அலிக்கும் அரசாங்க பணியாளருக்கும் இடையே நடந்த சண்டை  தொடர்பில் வெளியான பழைய வீடியோ தொடர்பில் எம்சிஎம்சி தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset