செய்திகள் இந்தியா
பதஞ்சலி மன்னிப்பை நிராகரித்த உச்சநீதிமன்றம்
புது டெல்லி:
ஆங்கில மருத்துவத்துக்கு எதிராக விளம்பரங்களை வெளியிட்ட கோரி யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் நிபந்தனையற்ற மன்னிப்பு ஏற்க உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இந்த விவகாரத்தில் இந்திய மருத்துவ தயாரிப்புகளுக்கு உரிமம் அளிக்கும் மாநில ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது குறித்து நீதிமன்றம் ஆட்சேபம் தெரிவித்தது.
பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. நவீன மருத்துவ முறையால் குணப்படுத்த முடியாத நோய்களை தங்களுடைய ஆயுர்வேத தயாரிப்புகள் குணப்படுத்தும் என அந்த நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. இதை எதிர்த்து இந்திய மருத்துவச் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கில் பதஞ்சலி நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.
இதைப் பொருப்படுத்தாமல் சர்ச்சைக்குரிய விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டது.
இதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து யோகா குரு ராம்தேவ், அந்த நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினர்.
இந்த மன்னிப்பு வெறும் வாய்வழி வார்த்தை என்று கூறி நீதிமன்றம் நிராகரித்தது.
இருவரும் மீண்டும் மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
அவற்றை விசாரித்த நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோர், நீதிமன்ற உத்தரவுகளை அவர்கள் பின்பற்றவில்லை.
வழக்குரைஞர் நீதிமன்றத்தில் உறுதியளித்த மறுதினம் அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் நிராகரிக்கப்படுகின்றன. மாநில உரிமம் ஆணையம் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளது.
இது குறித்து ஆணையத்தின் அதிகாரி விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 12, 2026, 3:23 pm
மும்பை தேர்தலில் போட்டியிடும் பிஜேபி கவுன்சிலருக்கு ரூ.124 கோடி சொத்து
January 10, 2026, 7:56 pm
ஒடிசாவில் அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக தனியார் விமானம்: 6 பேர் காயம்
January 9, 2026, 6:17 pm
இந்தியாவிலேயே காகிதப் பயன்பாடு இல்லாத முதல் நீதிமன்றம்
January 4, 2026, 4:26 pm
திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து
January 2, 2026, 3:20 pm
புத்தாண்டு தினத்தில் சபரிமலையில் திரண்ட பக்தா்கள்
December 31, 2025, 12:08 pm
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு ஒன்றிய அரசு இதுவரை வீடு ஒதுக்காமல் இழுத்தடிப்பு
December 29, 2025, 1:18 pm
விமானிகளுக்கு போதிய ஓய்வளிக்க 130 விமான சேவைகளை குறைக்க முன்வந்தது இண்டிகோ நிறுவனம்
December 27, 2025, 8:20 am
திருப்பதி கோவில் காணிக்கையில் ரூ.100 கோடி மோசடி செய்தவர்: விரைவில் தீர்ப்பு
December 26, 2025, 4:13 pm
