நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வளர்ப்பு சகோதரியைக் கத்தியால் தாக்கியச் சம்பவம்: குற்றத்தை மறுத்து லோரி ஓட்டுநர் விசாரணை

தெலுக் இந்தான்:

ஏப்ரல் மாதம் காய்கறி நறுக்கும் கத்தியைப் பயன்படுத்தி தனது வளர்ப்பு சகோதரிக்குக் காயம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் லோரி ஓட்டுநர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட 52 வயதான எல். தியாகராஜிக்கு எதிராக மாஜிஸ்திரேட் அஸ்வினி முன்னிலையில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்ட பிறகு அவர் அக்குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளார். 

குற்றச்சாட்டுகளின்படி, ஏப்ரல் 8-ஆம் தேதி தெலுக் இந்தான், தாமான் முஹிபாவிலுள்ள விட்டில் காய்கறி நறுக்கும் கத்தியைப் பயன்படுத்தி 31 வயதுடைய எஸ்.தேவிக்குக் காயத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 324-உடன் இணைந்து குறியீட்டின் பிரிவு 326A-வின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது. 

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 326A இன் படி குற்றம் சாட்டப்பட்டவர் தண்டிக்கப்படலாம்

முன்னதாக, வழக்குத் தொடரும் அதிகாரி, இன்ஸ்பெக்டர் நூர் ஐஸ்யா மாட் இசா, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 5,000 ரிங்கிட் ஜாமீன் விதிக்கப்பட வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு இடையூறு செய்ய அனுமதிக்கக் கூடாது என்ற கூடுதல் நிபந்தனையுடன் பரிந்துரைத்தார்.

எவ்வாறாயினும், தேசிய சட்ட உதவி அறக்கட்டளையின் வழக்கறிஞர் ஃபாஸ்டினா பிரான்சிஸ், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு குழந்தை இருப்பதால் குற்றவாளிக்குக் குறைந்தபட்ச ஜாமீன் தொகையை விதிக்க வேண்டும் என்று கோரினார்.

வழக்கு முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரைப் பார்க்க முடியாது என்ற கூடுதல் நிபந்தனையுடன் ஒரு ஜாமீனுடன் RM3,000 பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வழக்கு மீண்டும் குறிப்பிடப்படவுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset