நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாகனமோட்டி தாக்கப்பட்ட சம்பவம்:  நான்கு பாகிஸ்தானியர்கள் கைது

ஈப்போ:

சாலை விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனமோட்டியைத் தாக்கியது தொடர்பில் நான்கு பாகிஸ்தானிய ஆடவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நால்வரும் திங்கட்கிழமை வரை நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள். 

குற்றவியல் சட்டத்தின் 147வது பிரிவின்படி மேலதிக விசாரணையை மேற்கொள்ள அனுமதிக்குமாறு இன்று தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் தி.அஷ்வினியால் இந்த விவகாரம் முடிவு செய்யப்பட்டது.

தெலுக் இந்தான்-பீடோர் சாலையின் 16-வது கிலோ மீட்டரில் நிகழ்ந்த அந்தச் சாலை விபத்தில் மூன்று பாகிஸ்தானியர்கள் உயிரிழந்ததன் விளைவாக அந்த வாகனமோட்டி தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வாகனமோட்டி மற்றும் நான்கு ஆடவர்கள் சம்பந்தப்பட்ட கைகலப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட  காணொளி மூலம் அந்த நான்கு சந்தேகப் பேரும் அடையாளம் காணப்பட்டு நேற்று மாலை 4.20 மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஹிலிர் பேராக் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி அஹம்மத் அட்னான் பஸ்ரி கூறினார்.

நேற்று காலை 8.10 மணியளவில் அந்த விபத்து நிகழந்தத்தை தொடர்ந்து அதன் ஓட்டுநருக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டதாகத் முதற்கட்ட  விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கஞ்சா வகை போதைப் பொருளைக் உட்கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் அந்த 36 வயது வாகனமோட்டி தாம் தாக்கப்பட்டது தொடர்பில் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

தலையில் ஏற்பட்ட காயங்கள் தவிர அந்த ஆடவருக்குப் பெரிதாக எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset