நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமருக்கு ஆதரவு தெரிவித்த ஏழு உறுப்பினர் பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்: ரசாலி

கோலாலம்பூர்: 

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை ஆதரித்து 7 உறுப்பினர்கள் பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சியின் தகவல் தொடர்பாளர் ரசாலி இட்ரிஸ் தெரிவித்துள்ளார்.

எனவே, அவர்கள் அனைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தெரிவிக்கும் கடிதத்திற்காக காத்திருக்காமல் தங்களின் தொகுதிகளைக் காலி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

ஏப்ரல் 2-ஆம் தேதி கட்சியின் அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுக்கு அமைப்பு பதிவுத் துறை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அவர்களின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.  

ஆர்ஓஎஸ் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் அரசியலமைப்பு திருத்தத்தின் ஒப்புதலுக்கான அறிவிப்புடன் ஓர் அறிவிப்பு கடிதத்தை மட்டுமே கட்சி அனுப்பும்.

ஆக, ஏழு உறுப்பினர்களும் பெர்சத்துவின் கடிதத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலையில்லை. திராணி இருந்தால் அவர்களே ராஜினாமா செய்யட்டும் என்றும் அவர் சாடினார். 

மார்ச் 2-ஆம் தேதி கட்சிக்கு எதிரான எந்தக் கட்சியையும் ஆதரிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கட்சி உறுப்பினர்களை அகற்றும் வகையில் கட்சியின் அரசியலமைப்பில் ஒரு திருத்தத்திற்கு பெர்சது ஒப்புதல் அளித்தது. 

பெர்சத்து அரசியலமைப்பின் 10-ஆவது பிரிவைத் திருத்துவதற்கான பிரேரணையை ஒருமனதாக ஆதரிக்கும் கட்சிப் பிரதிநிதிகளுடன் கூடிய பொதுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதுவரை, ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒரு பெர்சத்து சட்டமன்ற உறுப்பினரும் அன்வாரின் தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset