நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஜெர்மனியில் சாலை விபத்தில் சிக்கிய ஹாரி கேனின் மூன்று பிள்ளைகள்

முனிச்:

இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனும் பாயர்ன் முனிச் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவருமான ஹாரி கேனின் பிள்ளைகள் மூவர் சாலை விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் பங்கெடுக்கும் பொருட்டு ஹாரி கேன் லண்டனுக்கு திரும்பிய நாளில் இந்த விபத்து நடந்துள்ளது. 

முனிச் அருகே உள்ள பவேரியாவில் திங்கள்கிழமை மாலை 5.15 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதே வேளை ஹாரி கேன் இங்கிலாந்தில் தரையிறங்கியுள்ளார். 

ஹாரி கேன் பிள்ளைகள் பயணித்த வாகனத்தை 20 வயதான ஓட்டுநர் ஒருவர் மோதியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹரி கேனின் நான்கு பிள்ளைகளில் மூவர் அந்த விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆனால் எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset