நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மரணத்தின் வாசம் மட்டுமே மிச்சமிருக்கிறது: காசாவில் கதிகலங்கி நிற்கும் மக்கள்

காசா:

காசா மீதான தாக்குதல்களை நிறுத்திக் கொண்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறியதை அடுத்து  நகருக்குள் நுழைந்த மக்கள்,

தங்கள் இடம் முழுவதும் தரைமட்டம் ஆகி மரணத்தின் வாசம் மட்டுமே மிச்சமிருக்கிறது என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் ஏற்பட்ட பயங்கர போர் ஓராண்டைக் கடந்து நீடித்து வருகிறது. 

இருதரப்பு தாக்குதல்களாலும் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தாக்குதல் போக்கைக் கைவிட வேண்டும் என்று உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வந்தன. 

மறுபுறம், பாலஸ்தீனத்தின் காசா பகுதி மக்களைப் பணையக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்ட ஹமாஸ் அமைப்பு, தாக்குதல்களை நிறுத்த காட்டாயப்படுத்தியது.

இஸ்ரேலுக்கு இதனால் அழுத்தம் அதிகரித்த நிலையில், பணயக் கைதிகளின் நலன் கருதி, பாலஸ்தீன எல்லைகளிலிருந்து தமது படைகளைத் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. 

இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவும் இந்தத் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதிக்குள் நுழைந்த அவ்வூர் மக்கள், சிதலமடைந்து கிடக்கும் தங்கள் நகரைக் கண்டதும் கண்ணீருடன் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 

எங்களுக்கென்று நகரமே இல்லாமல் வெறும் கட்டாந்தரையாகப் போய்விட்டது. 

கான் யூனிஸ் பகுதியில் நாங்கள் 4 லட்சம் பேர் இருந்தோம். இப்போது 10,000 பேர் கூட இல்லை. 

வீடுகள் இடிக்கப்பட்டு, பள்ளி, ரயில் நிலையம் உள்ளிட்டவை சிதைக்கப்பட்டு இருக்கிறது. இடிபாடுகளில் சிக்கியிருக்கும் உடல்களை மீட்க தினமும் போராடி வருகிறார்கள். 

நகரில் எங்கு பார்த்தாலும் மரணத்தின் வாசமே காணப்படுகிறது என்று கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset