நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காஸாவில் இஸ்ரேல் மிகப்பெரிய தவறு இழைத்துள்ளது: பிரிட்டன் துணைப்பிரதமர் சாடல்

லண்டன்: 

காஸாவில் இஸ்ரேல் படையினர் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளனர். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கப்பட்ட போரின் காரணமாக சுமார் 33 ஆயிரம் அப்பாவி மக்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று பிரிட்டன் நாட்டின் துணைப்பிரதமர் ஒலிவர் டொவ்டன் கூறினார். 

இந்த போரின் காரணமாக மூன்று பிரிட்டன் ஊழியர்கள் பலியாகியுள்ளனர். இதற்கு இஸ்ரேல்  தகுந்த பதிலை பிரிட்டன் நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

இதன் காரணமாக பிரிட்டன் அரசாங்கம் நடப்பு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவிற்கு எந்தவொரு மன்னிப்பு முழுவதுமாக கிடைக்க வழிவகை செய்யப்படாது என்று ஒலிவர் திட்டவட்டமாக தெரிவித்தார். 

காஸா மக்களுக்கு எதிரான இந்த போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் இஸ்ரேல் நாட்டிற்கு ஆயுதங்களை இறக்குமதி செய்யும் சம்பந்தப்பட்ட நாடுகளும் இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset