நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாகனங்களிலிருந்து குப்பைகளை வெளியே வீசுபவர்களுக்கு அபராதம் விதிப்படும்

ஈப்போ: 

வாகனங்களிலிருந்து குப்பைகளை வெளியே வீசும் நபர்களுக்கு எதிராக உடனடியாக அபராதம் விதிக்குமாறு உள்ளூர் மாநாகராட்சிக்கு வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

சாலையோரத்தில் சிதறிக் கிடக்கும் குப்பைகளைக் காட்டும் புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து துப்பரவுப் பணி தொழிலாளர்களை அதனை அப்புறப்படுத்தியதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

குப்பைகளை வாகனங்களிலிருந்து வெளியே வீசுபவர்களுக்கு எதிராக உள்ளூர் மாநாகராட்சி அபராதம் விதிக்கும். மேலும், அவர்கள் அந்த அபராதத்தைச் செலுத்துவதை உள்ளூர் மாநாகராட்சி உறுதி செய்யும். 

குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுத் தூய்மையைப் பராமரிப்பது அனைத்துத் தரப்பினரின் பொறுப்பாகும். அது துப்பரவுப் பணியாளர்களின் பொறுப்பு மட்டுமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். 

பொறுப்பற்ற சிலர் வாகனங்களிலிருந்து குப்பைகளைக் கொட்டும் செயல் வருத்தமளிப்பதாகத் தெரிவித்த ங்கா, சுற்றுப்புறத்தின் தூய்மையை உறுதி செய்ய வழங்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்துவதோடு குப்பைகளை உரிய இடத்தில் வீசுவதற்கும் அனைத்துத் தரப்பினரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

காரில் உணவு உண்ட பிறகு அந்தப் பைகளைக் காரில் வைத்து விட்டுப் பின் குப்பை தொட்டிகளில் வீச வேண்டும். 

அதை விடுத்துச் சாலையின் ஓரத்தில் வீசி எறிந்துவிட்டுத் துப்பரவு பணியாளர்கள் குப்பைகளை எடுப்பார்கள் என்ற எண்ணத்தைப் பொதுமக்கள் கைவிட வேண்டும் என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset