நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போர்ட்டிக்சனில் கடல் உணவில் நச்சு: 8 பேர் மருத்துவமனையில் அனுமதி; இருவர் ஐசியூவில் சிகிச்சை

போர்ட்டிக்சன்:

போர்ட்டிக்சனில் கடல் உணவு (மஸ்ஸல்) சாப்பிட்டதால் ஏற்பட்டதாக நம்பப்படும் உணவு நச்சுத்தன்மையின் எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை நெகிரி செம்பிலான் சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஹர்லினா அப்துல் ரஷித் உறுதிப்படுத்தினார்.

இதில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இருவர் மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஐந்து பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு  நபருக்கு வெளிநோயாளராக சிகிச்சை பெற்று வருகிறார்.

எட்டு பேரும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 

மாவட்டத்தில் உள்ள இரண்டு சந்தைகளில் இருந்து வாங்கி வந்த மஸ்ஸல்களை சாப்பிட்டதாகவும் அவர் கூறினார்.

இதை சாப்பிட்டதால் அவர்களுக்கு தலைவலி, கை, கால்களில் உணர்வின்மை, தசை பலவீனம் போன்றவை பிரச்சினைகள் ஆரம்பித்தன.

மாநில சுகாதாரம், மீன்வளத் துறைகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மஸ்ஸல்களின் மாதிரிகளைக் கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset