நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளி பேருந்துகளுக்கான  எல்பிஎஸ் லைசென்ஸை  போக்குவரத்து அமைச்சு மீண்டும் வெளியிட வேண்டும்: ஓட்டுநர்கள் கோரிக்கை

ஈப்போ:

பள்ளி பேருந்து ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதால் நிலைமைகளை சமாளிக்க தங்களுக்கு போக்குவரத்து அமைச்சு எல்.பி.எஸ். லைசன்ஸ்சை மீண்டும் வெளியிட வேண்டும்.

ஈப்போ இந்திய பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் சங்கத்தினர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பள்ளி விடுமுறைக் காலங்களில் அதன் ஓட்டுநர்கள் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு வழங்கப்பட்டு  வந்த எல்.பி.எஸ். லைசன்ஸ் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

அதைத் தொடர்த்து எங்களின் நிலைமைகளை சமாளிக்க  பணம் ஈட்டி வந்த அந்த வருமானம் பாதித்துள்ளது என்று அச்சங்க அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்

பள்ளி பேருந்துகளின் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு கண்டு வருவதால் வருமானம் பெரும் பாதிப்படைந்து வருகிறது.

நிலைமைகளை சமாளிக்க எஸ்.பி.எஸ். லைசென்சை போக்குவரத்து அமைச்சு வெளியிட்டால் வருமானம் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று ஈப்போ இந்திய  பள்ளி பேருந்து சங்கத்தின் தலைவர் ஜி. ராமதாஸ் வலியுறுத்தினார்.

நாட்டில் விலை வாசி உயர்வு, பேருந்துகளின் உபரி பாகங்கள்  விலை அதிகரிப்பு  மேலும் எங்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது.

ஆகவே நிலைமையை சமாளிக்க  எல்.பி.எஸ். லைசன்ஸ் வெளியிடவேண்டும்.

நாங்களும் தரமான பேருந்துகளை வைத்துள்ளோம்  என்று  ராமதாஸ்  விளக்கம் அளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset