நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

iPL 2024: CSKயை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்

விசாகப்பட்டினம்: 

நடப்பு ஐபிஎல் சீசனின் 13-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்களில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. 

இந்தப் போட்டியின் கடைசி கட்டத்தில் பேட் செய்த தோனி, 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்ததார்.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரட்டியது. 

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா இணைந்து ஆட்டத்தை துவக்கினர். 

பவர்பிளே ஓவர்களில் டெல்லி அணி பவுலர்கள் சிறந்த முறையில் பந்து வீசி நெருக்கடி தந்தனர். 

ருதுராஜ் 1 ரன்னிலும், ரச்சின் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதில் 12 பந்துகளை எதிர்கொண்டிருந்தார் ரச்சின். அவர்கள் இருவரது விக்கெட்டையும் கலீல் அகமது கைப்பற்றினார்.

தொடர்ந்து ரஹானே மற்றும் மிட்செல் இணைந்து நிதானமாக ஆடினர். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

மிட்செல் 34 ரன்களிலும், ரஹானே 45 ரன்களும் எடுத்தனர். சமீர் ரிஸ்வி, ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்தில் விக்கெட்டை இழந்தார். துபே, 18 ரன்களில் வெளியேறினார்.

சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 20 ரன்கள் மட்டுமே சென்னை அணி எடுத்தது. தோனி, 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் இதில் அடங்கும். 

ஜடேஜா, 21 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset