நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியாவிலிருந்து 500,000 டன் வெள்ளை அரிசியை  எதிர்பார்க்கிறோம்: முஹம்மத் சாபு 

கோலாலம்பூர்:

கூடுதலாக 500,000 டன் வெள்ளை அரிசியை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியாவிடம் கேட்கவிருப்பதாக விவசாயம், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் முஹம்மத் சாபு கூறியுள்ளார்.

அதன் அதிகாரபூர்வ கோரிக்கை தூதரக அதிகாரிகள் வாயிலாக விரைவில் அனுப்பப்படும் என்றார் அவர்.

170,000 டன் எடையிலான வெள்ளை அரிசியை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அரசாங்கம் ஏற்கனவே சிறப்பு அனுமதி வழங்கியதை மலேசிய அரசாங்கம் மதிப்பதாக  அவர் கூறினார்.

பாசுமதி அல்லாத அந்த வெள்ளை அரிசியை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அரசாங்கம் அனுமதித்திருப்பதாகக் கடந்த ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி தகவல் வெளியானது.

இதற்கிடையே 100,000 டன் எடையிலான வெங்காயத்தை இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்ய மலேசியா இந்த ஆண்டுத் தொடக்கத்தில் அதிகாரபூர்வமாக விண்ணப்பம் செய்திருப்பதையும் அமைச்சர் சுட்டினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset