நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு நஜீப் காலத்தில் உருவாக்கப்பட்ட புளூபிரிண்டை அமல்படுத்தினாலே போதும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர்: 

இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு நஜீப் காலத்தில் உருவாக்கப்பட்ட புளூபிரிண்டை அமல்படுத்தினாலே போதுமானதாகும்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் காலத்தில் செடிக் உருவாக்கப்பட்டது. அதன் வாயிலாக பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.

தேசிய முன்னணி வீழ்த்தப்பட்ட பின் செடிக், மித்ராவாக உருமாற்றப்பட்டது. அப்போது முதல் பிரதமர் துறைக்கும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கும் பந்தாடப்பட்டு வருகிறது.

தற்போது மித்ராவுக்கு பொறுப்பேற்றுள்ள தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஏரன் அகோ, இந்தியர் மேம்பாடுத் திட்டங்கள் குறித்து முழு ஆய்வு நடத்த போவதாக கூறியுள்ளார்.

குறிப்பாக பெமாண்டு எனும் நிறுவனத்தை நியமனம் செய்து, அதற்கு 5 லட்சம் ரிங்கிட் கட்டணம் வழங்கியுள்ளதாக  கூறினார்.

அமைச்சரின் இந்த கூற்று இந்திய சமுதாயத்தை முட்டாளாக்கும் நடவடிக்கையாக நான் பார்க்கிறேன்.

காரணம் நஜீப் பிரதமராக இருந்த போது இந்திய சமுதாய மேம்பாட்டிற்காக புளூபிரிண்ட் தயார் செய்யப்பட்டது. 

மஇகா உட்பட பல அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இது தயார் செய்யப்பட்டது.

அந்த புளூபிரிண்ட் என்னவானது. எங்கு உள்ளது என்பது தான் எங்களின் கேள்வியாகும்.

சம்பந்தப்பட்ட புளூபிரிண்டை அமல்படுத்தினாலே இந்திய சமுதாயத்தின் தேவைகள் பூர்த்தியாகி விடும்.

இதற்கு ஏன் புதிய ஆய்வுகள் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மீது இந்திய சமுதாயம் மிகப் பெரிய நம்பிக்கையை கொண்டுள்ளது.

ஆனால் அரசாங்கத்தின் இதுபோன்ற நடவடிக்கைகள் இந்திய சமுதாயத்திடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.

-பார்த்திபன் நகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset