நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துல்லியமற்றத் தராசுகளால் பயனீட்டாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர்: முஹைதீன் அப்துல் காதர் 

பினாங்கு:

சந்தைகளில் வைக்கப்பட்டுள்ள எடை நிறுவைகளின் செயல் திறனை  பற்றி உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு தீவிர ஆய்வு செய்ய வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முஹைதீன் அப்துல் காதர்கூறினார். 

துல்லியமற்ற இயந்திர எடையுள்ள தராசுகளை (இயந்திரத்தின் இருபுறமும் டயல் குறிகாட்டிகளுடன்) பயன்படுத்தும்  சந்தை வர்த்தகர்கள் மீது சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு பி.ப சங்கம் கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் தெரிவித்தார்.
 
பினாங்கில் உள்ள அனைத்து சந்தைகளிலும் நாங்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில், எடை பார்க்கப்படும் தராசுகளில் சில அவற்றின் அளவுத்திருத்த ஸ்டிக்கர்கள் பயனீட்டாளர்கள் பார்க்கும்படி ஒட்டப்பட்டிருக்கவில்லை.

ஆனால், அவற்றை பயனீட்டாளர்கள் பார்க்க முடியாதவாறு  ஒட்டப்பட்டுள்ளது.

உண்மையில் ஸ்டிக்கரை பயனீட்டாளர் அல்லது பொருள் வாங்குபவர் பார்க்கும்படி இருந்தால், அது சட்டப்பூர்வமான அமைச்சால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தராசு என நம்பலாம்.

அப்போதுதான் இந்த எடை நிறுவை சரியானது, அது வணிகத்தில் பயன்படுத்த  தகுந்தது என உறுதியாக பயனீட்டாளர் நம்புவார்.

ஸ்டிக்கர் அளவீடு செய்யப்படாத எடைத் தராசுகளைப் பயன்படுத்துபவர்கள் எடைகள், அளவீடுகள் சட்டம் 1972 ஐ மீறுவதாக இருக்கும்.

சட்டத்தின் கீழ், வர்த்தகர்கள் தங்கள் எடை அளவுகளை ஆண்டுதோறும் மறு அளவீடு செய்ய அனுப்ப வேண்டும்.

ஒரு பயனீட்டாளர் எளிதாக படிக்கும் வகையில் அளவுத்திருத்த ஸ்டிக்கரில் பெரிய தடிமனான எழுத்துக்களில் அளவுத்திருத்த ஆண்டை அச்சிடுவது குறித்து அமைச்சு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

அளவீட்டு ஸ்டிக்கருடன் எடையிடும் தராசின் பக்கமானது பயனீட்டாளரை நோக்கி இருக்கும் வகையில் தெளிவாகக் காட்டப்பட வேண்டும் என்பதை வணிகர்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

அண்மையில்  கோத்தா பாருவில் உள்ள வர்த்தகர் மீது தவறான எடை தராசை பயன்படுத்தியதற்காக பயனீட்டாளர் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதே நேரத்தில் பயனீட்டாளர்வாங்கிய பொருளின் எடையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதன் எடையை சரிபார்க்க ஒவ்வொரு சந்தையிலும் இரண்டு பொது எடை தராசுகள் (அதில் ஒன்று ஹலால் பொருட்களுக்கானது) இருப்பதையும் அமைச்சு உறுதி செய்ய வேண்டும்.

குறைந்த எடை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு அல்லது ஆரோக்கியமற்ற வியாபார நடைமுறைகள் போன்ற ஏதேனும் புகார்கள் இருந்தால் பயனீட்டாளர் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில், பொது எடைத் தராசுகள் இருக்கும் இடத்தில் தொடர்பு எண் வழங்கப்பட வேண்டும் என்றும் பி.ப சங்கம் கேட்டுகொள்வதாக முஹைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset