நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ABSOLUT BAZAAR X FESTIVAL GAYA RAYA 2024 கண்காட்சி; பெர்சாடா ஜொகூரில் நடைபெறுகிறது

 

கோலாலம்பூர்:
MY EVENTS INTERNATIONAL மற்றும் ABSOLUT EVENTS இணைந்து முதன்முறையாக ABSOLUT BAZAAR X FESTIVAL GAYA RAYA 2024 கண்காட்சி மற்றும் வியாபார தளத்தை ஜொகூர் மாநிலத்தில் துவங்கவுள்ளனர்.

எதிர்வரும் மார்ச் 22 முதல் 24 வரை பெர்சாடா ஜொகூரில் இந்த கண்டாட்சி நடைபெறவுள்ளது. இதில் சுமார் 200 முகப்பிடங்கள் அமைத்து 5 லட்சம் பார்வையாளர்கள்,பொதுமக்கள் ஆகியோர்  வருகை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சி நிர்வாக துறையில் கடந்த 17 ஆண்டுகளாக இருந்து வரும் MY EVENTS INTERNATIONAL இந்த முறை ABSOLUT EVENTS உடன் ஒணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

நெருங்கி வரும் ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு பல்வேறு நிலையிலான வர்த்தக நடவடிகைகள், உணவு பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க இந்த ABSOLUT BAZAAR X FESTIVAL GAYA RAYA நிகழ்ச்சி உறுதுணையாக அமைந்துள்ளது.

அத்துடன் வர்த்தகம், தொழிலியல், தொழில்முனைவோர், கலை, அறிவியல், தொழில்நுட்பம், உணவு சேவை துறை ஆகியவை இங்கே சங்கமிக்கும் நிகழ்வாக இந்த வர்த்தக பெருவிழா மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது.


இந்நிலையில், SME எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு இந்த தளம் என்பது அவர்களின் வர்த்தக வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளும் ஓர் அற்புதமான தளமாகும்.

இந்த ABGR 2024 விழாவிற்கு மீடியா ப்ரிமா பெர்ஹாட் அதிகாரப்பூர்வ ஊடகமாக விளங்குகிறது. அத்துடன் இந்த வர்த்தக பெருவிழாவில் உள்ளூர் நட்சத்திர பாடகர்களான டத்தோ சித்தி நூர் ஹலிசா, பெல்லா அஸ்தில்லா, அன்னா ஜொப்லிங், நபிலா நசிரா ஆகியோர் நிகழ்ச்சிகளையும் படைக்கவுள்ளனர் என்று ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.

ஆக, பொதுமக்கள் இந்த ABGR 2024 நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொண்டனர். உங்கள் அனைவரையும் பெர்சாடா ஜொகூரில் சந்திக்கிறோம்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset